மாற்றுத்திறனாளி குழந்தைகள் 90 பேருக்கு இலவச சிகிச்சை

0
13

அன்னுார்; நித்தில்யம் அறக்கட்டளை சார்பில், கணபதி மற்றும் சொக்கம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி செயல்படுகிறது.

இவற்றின் சார்பில், அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரண்டு வயது முதல் 20 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் கண், நரம்பியல், உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்றனர்.

புளியம்பட்டி ரோட்டரி சங்கம், கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை, சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. முகாமில் 90 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அறக்கட்டளை அறங்காவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.