ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளி விழாவையொட்டி பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெகமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பேரூராட்சி தலைவர் ஆர்த்தி சபரிகார்த்திகேயன் தொடங்கிவைத்தார். இதில் செயல் அலுவலர் பத்மலதா, வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.