மாற்றுத்திறனாளர்கள், முதியோரை உற்சாகமூட்ட சிறப்பு இசை நிகழ்ச்சி

0
7

கோவை மாநகராட்சி, ஸ்வதர்மா அறக்கட்டளை சார்பில், சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக, சிறப்பு இசை நிகழ்ச்சி உக்கடம் பெரியகுளம் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 60-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய அம்சமாக, டி.ஜே. இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடிய மாற்றுத்திறனாளிகள், ‘இந்த நிகழ்ச்சி எங்கள் மனச்சோர்வை கலைத்து விட்டது’ எனத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அருணா கூறுகையில், ”சமூக வெளியில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அதிகமாக கலந்துகொள்ள வாய்ப்பு குறைவாக உள்ளது.

”அவர்களுக்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது,” என்றார்.