கோவை : கோவையில் ‘தினமலர்’மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில், ‘மார்கழி விழாக்கோலம்’ கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அபார்ட்மென்ட்களில் வசிக்கும் மகளிர், இந்த கோலப் போட்டியில் பங்கேற்று புள்ளிக்கோலம்,பூக்கோலம், ரங்கோலி என, விதவிதமான வண்ணக் கோலங்களை வரைந்து, பரிசுகளை வென்று வருகின்றனர்.
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி., காலனி அருகில் உள்ள, மார்ட்டின் டைசன் அபார்ட்மென்டில் நேற்று போட்டி நடந்தது.
கோலப்போட்டியில், 36 பேரும், புள்ளி கோலத்தில் 17 பேரும், ரங்கோலியில், 17 பேரும், பூக்கோலத்தில் 2 பேரும் பங்கேற்றனர்
இதில் பலரும் புள்ளிக்கோலம் மற்றும் ரங்கோலி கோலங்களை வரைந்து, அபார்ட்மென்ட் வளாகத்தை, வண்ணமயமாக மாற்றியிருந்தனர்.
புள்ளிக்கோலத்தில் பரிசு பெற்ற சரிதா கூறுகையில், ”நான் ஆறு வயதில் இருந்து கோலம் போடுகிறேன். அம்மாதான் புள்ளிக் கோலம் போட சொல்லி கொடுத்தாங்க. பூக்கோலம், ராங்கோலி கோலமும் போடத் தெரியும். போட்டியில் பங்கேற்று பரிசு வாங்குவது இதுதான் முதல் முறை,” என்றார்.
இந்த மார்கழி விழாக்கோலம் போட்டியை, இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.
பரிசு பெற்றவர்கள்
ரங்கோலி: கீர்த்திகா, ஸ்ரீவித்யா, அலமேலு, லட்சுமிதேவி, பாவனாஸ்ரீ, ஜோஸ்னா.புள்ளிக்கோலம்: சரிதா, விஜயலட்சுமி, ஸ்ரீமதி, லதா, முத்துலட்சுமி, நாகலட்சுமி.பூக்கோலம்: ஆஷா, தீபா.