மாமன்ற கூட்டம்; வரும் 30ல் கூடுகிறது குப்பை மறு அளவீடு செய்ய திட்டம்

0
17

கோவை; கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், 67 நாட்களுக்கு பின், வரும், 30ம் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம், மாதந்தோறும் நடத்துவது வழக்கம். அக்., 23ல் நடத்தப்பட்டது; நவ., மாதம் கூட்டம் நடத்தவில்லை. டிச., முதல் வாரத்தில் நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், வழக்கம்போல், இம்மாத இறுதியில், 30ம் தேதி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தீர்மானப் பொருட்கள் கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதில், வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பை தொடர்பான தீர்மானம் முன்மொழியப்பட்டு இருக்கிறது. வெள்ளலுார் கிடங்கில், ஏழு லட்சத்து, 43 ஆயிரத்து, 287 மெட்ரிக் டன் பழைய குப்பை தேங்கியிருந்தது; ‘பயோமைனிங்’ முறையில் அகற்ற ரூ.58.54 கோடி தமிழக அரசு ஒதுக்கியது.

ஆனால், ஏப்., 6 முதல் ஏப்., 17 வரை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது; குப்பை எரிந்து சாம்பலானதால் அளவு குறைந்திருக்கிறது. அதனால், குப்பை மறுஅளவீடு செய்யப்படுகிறது. இப்பணியை சென்னையை சேர்ந்த நிறுவனம் மேற்கொள்ளவும், இதை கூராய்வு செய்யும் பொறுப்பு அண்ணா பல்கலைக்கு, மேயரின் முன்அனுமதி பெற்று உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.