மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

0
3

கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பல்வேறு மானியத்திட்டங்களில் பயன் பெற தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், விவசாயிகள் பயன்பெற வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், தற்போது விவசாயிகளுக்கு, 20 மீட்டர் அகலம், 20 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, 30 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மண்புழு கூடாரம் அமைக்க, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். பிற கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு இத்திட்டங்களில் பயன்பெறலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.