மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி

0
53

கோவை, டிச. 3: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய தேனீ வாரியம் திட்டத்தின் கீழ் 7 நாட்கள் பயிற்சித் திட்டமான ‘‘மாநில அளவிலான அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்புப் பயிற்சி’’ நடக்கிறது. இந்த பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 விவசாயிகள், பயனாளிகள் பங்கேற்கின்றனர்.

துவக்க விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் தலைமை உரையாற்றினார். இந்த ஏழு நாள் பயிற்சியில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீ இனங்கள் மற்றும் நடத்தை, தேன், மகரந்தம் சேகரிப்பு, பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மை, தேனீயின் மூலம் பெரும் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டல், மகரந்தச் சேர்க்கையில் அவற்றின் பங்கு, தேன் பிரித்தெடுத்தல்,

தரக் கட்டுப்பாடு மற்றும் சோதனை, தேனீ நச்சு மேலாண்மை, பருவகால மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பில் வணிக வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி நாளையுடன் நிறைவடைகிறது. இதில், பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்ரமணி, பூச்சியியல் துறை தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.