கோவை, மார்ச் 13: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 5வது வார்டுக்கு உட்பட்ட வழியாம்பாளையத்தில் மாநகராட்சி ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு, ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக், வார்டு கவுன்சிலர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி, புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
விழாவில், உதவி கமிஷனர் முத்துசாமி, மாநகராட்சி பொறியாளர்கள் கருப்புசாமி, ராஜேஷ் கண்ணன், சந்திரன், பூங்கொடி, குமார், கணேசன், அன்சார், பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ரவிக்குமார், நந்தகோபால், சின்னசாமி, ரங்கசாமி, ரங்கநாதன், பாலு, ராமகிருஷ்ணன், ரவி, ரங்கசாமி, அண்ணா முத்து, ராமச்சந்திரன், அண்ணாதுரை, ராஜன், முரளிகிருஷ்ணன், கார்த்திக், தாண்டவமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.