கோவை மாநகராட்சியின் சார்பில் உங்களைத்தேடி நூலகம் எனும் பெயரில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ரேஸ்கோர்ஸ், வ.உ.சி.பூங்கா, வாலாங்குளம், உக்கடம் பெரிய குளம் மற்றும் கொடிசியா வளாகம் உள்பட முக்கிய இடங்களுக்கு நடமாடும் நூலகம் சென்று வருகிறது.
அந்த வகையில் நேற்று கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு நடமாடும் நூலகம் சென்றது. அதில் இருந்த புத்தகங்களை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் எடுத்து படித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், கோவை மாநகராட்சியில் உள்ள 42 பள்ளிகளுக்கு நடமாடும் நூலகம் செல்ல உள்ளது. அதில் உள்ள புத்தகங்களை படித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்றார்.