கோவை, ஜன. 21: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேயர் ரங்கநாயகி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். எனவே, கோவை மாநகராட்சிக்கு பகுதிக்கு உட்பட்ட மக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து மனு அளிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.