மாநகராட்சியின் பரப்பு 415.40 சதுர கி.மீ., விரிந்தது; 150 வார்டுகள்; 15 மண்டலங்கள் உருவாக்க திட்டம்

0
10

கோவை; கோவை மாநகராட்சியின் பரப்பு, 415.40 சதுர கி.மீ.,க்கு விரிவடைந்து இருப்பதால், மறுவரையறையில், 150 வார்டுகள் உருவாக்கவும், 15 மண்டலங்கள் ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.

மாநகராட்சியுடன் இணைக்கலாமா; எந்தெந்த உள்ளாட்சிகளை சேர்க்கலாம் என்கிற பரிந்துரை அனுப்ப, தமிழக அரசு கோரியது. மாநகராட்சிக்கு அருகாமையில், 5 கி.மீ., சுற்றளவுக்குள் இருந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் மாவட்ட நிர்வாகம் கருத்து கேட்டது. ஒரு நகராட்சி, நான்கு பேரூராட்சிகள் மற்றும், 11 ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சி எல்லையை விஸ்தரிக்க பரிந்துரை அனுப்பியது. இதன்படி, 438.54 சதுர கி.மீ.,க்கு மாநகராட்சி பரப்பு விரிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது, மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் ஆகிய நான்கு பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், கீரணத்தம், சீரப்பாளையம், பேரூர் செட்டிபாளையம், பட்டணம்,

வெள்ளானைப்பட்டி, கள்ளிபாளையம் ஆகிய, 11 ஊராட்சிகள் என, 16 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்க பரிந்துரைக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசித்த பின், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளபாளையம் பேரூராட்சியை சேர்க்காமல், வேடபட்டி இணைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், பேரூர் செட்டிபாளையம், பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகள் சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக, அசோகபுரம், மலுமிச்சம்பட்டி ஆகிய இரு ஊராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது, 14 உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளன. இவற்றின் பரப்பு – 158.36 சதுர கி.மீ., அதனால், மாநகராட்சி பரப்பு – 415.40 சதுர கி.மீ.,க்கு விரிவடைந்திருக்கிறது. மாநகராட்சி பரப்பு விஸ்தரிப்பு செய்தது தொடர்பாக, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏதேனும் உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படுவதாக நினைத்தால், அறிவிப்பு வெளியிட்ட ஆறு வாரத்துக்குள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு ஆட்சேபனையை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

அரசிதழில் வெளியீடு, அவகாசம் முடிந்தபின், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் வார்டுகள் எண்ணிக்கை முடிவெடுக்கப்பட்டு,

மறுவரையறை பணி துவங்கும். மக்கள் தொகை, வாக்காளர் எண்ணிக்கை மற்றும் வரி விதிப்புதாரர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்படும்.

தற்போதுள்ள மாநகராட்சி பகுதியில், 21 லட்சம் மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்படுகிறது; இணைக்கப்பட்ட உள்ளாட்சிகளில் வசிப்போரை இணைத்தால் இன்னும் பல லட்சம் அதிகரிக்கும். அதனால், 150 வார்டுகள் உருவாக்க வாய்ப்பிருக்கிறது. சென்னையில் இருப்பதைபோல், தலா, 10 வார்டுகள் வீதம், 15 மண்டலங்கள் உருவாக்க ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனைக்கான அவகாசம் முடிந்தபின், அடுத்த கட்ட பணி நடக்கும். பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி

கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன், வார்டு மறுவரையறை பணியை செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறின