மாநகராட்சிக்கு தொழிற்சங்கத்தினர் குப்பை அள்ளும் பணிக்கு கூட்டுறவு முறை யோசனை

0
12

கோவை : கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், டி.பி.சி., பணியாளர்கள், ஓட்டுனர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், மீண்டும் தனியார் நிறுவனத்திடம் குப்பை அள்ளும் பணியை ஒப்படைக்கும் பட்சத்தில், எத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர்.

கூட்டமைப்பினர் முன்மொழிந்த யோசனைகளில் முக்கியமானவை:

n இப்பணியை தொழிலாளர்களுக்கு மாநகராட்சியே நேரடியாக வழங்கி, சம்பளம் மற்றும் இதர சட்ட பலன்களை அளிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்.

n தவிர்க்க முடியாத சூழலில் வெளிமுகமை முறையில் குப்பை அள்ளும் பணி வழங்கும் பட்சத்தில், தொழிலாளர்களுக்குள் கூட்டுறவு முறை ஏற்படுத்தி, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

n குறைந்தபட்ச சம்பளம், ஒரே வேலைக்கு ஒரே சம்பளம், குறைந்தபட்ச போனஸ் மற்றும் பணிக்கொடை உத்தரவாதம், சீருடை மற்றும் பணி பாதுகாப்பு உபகரணங்கள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

n தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பலன்கள் கிடைக்கும் வகையில் ஒப்பந்த ஷரத்துக்கள் அமைக்க வேண்டும்.

n இட ஒதுக்கீடு முறையில், துாய்மை பணிக்கு நியமிக்கப்பட்ட, 325 பேரையும் துாய்மை பணிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது