மாணவர்களின் அறைகளில் போலீசார் திடீர் சோதனை

0
55

போத்தனூர்: கோவை குனியமுத்தூர் போலீசார், நேற்று கல்லூரி மாணவர்களின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர், மாவட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, கஞ்சா, ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று காலை கோவைபுதூர், பி.கே.புதூர் சுற்றுப்பகுதிகளில் மாணவர்கள் தங்கியுள்ள வீடு, அறைகளில் அதிகாலை, 5:30 மணி முதல், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், தங்கம் தலைமையில், 20 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். எதுவும் சிக்கவில்லை.