மாட்டிற்கு மஞ்சள் நீர் ஊற்றி மக்கள் வழிபாடு

0
7

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, தேவராடிபாளையத்தில் மாட்டிற்கு மஞ்சள் நீர் ஊற்றி பொதுமக்கள் வழிபாடு செய்தனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

கிணத்துக்கடவு சுற்றியுள்ள பகுதிகளில், பொங்கல் விழாவை பொதுமக்கள் கொண்டாடினர். அவ்வகையில், தேவராடிபாளையம் பகுதியில், காணும் பொங்கலை முன்னிட்டு, சலங்கை மாடுகளுக்கு மஞ்சள் துணியை தலையில் கட்டி மஞ்சள் பூசி, வீடு தோறும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதில் மக்கள் பலர், மாட்டின் மீது மஞ்சள் நீரூற்றி ஆரத்தி எடுத்து, பூஜை செய்து வழிபட்டனர் மேலும், வீட்டில் உள்ள தானியங்களை சலங்கை மாடுகளுக்கு அளித்தனர். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.

தொடர்ந்து சலங்கை மாடுகளை கோதவாடி ஆல்கொண்ட பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்று பொதுமக்கள் பலர் வழிபாடு செய்தனர். மேலும், கோவில் வளாகத்தில் கால்நடைக்கான உருவ பொம்மைகள் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், தேவராடிபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.