ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.51¾ லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மாசாணியம்மன் கோவில்
ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பல நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி தட்டு காணிக்கை. உண்டியலில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரத்து 785-ம், நிரந்தர உண்டியலில் ரூ.37 லட்சத்து 55 ஆயிரத்து 29-ம் என மொத்தம் ரூ.51 லட்சத்து 86 ஆயிரத்து 814 இருந்்தது.
வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள்
மேலும் 181 கிராம் தங்கமும், 314 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். இதேபோல் இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் நாட்டு ரூபாய்களை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
இந்தப் பணியில் மாசாணியம்மன் கோவில் உதவி ஆனணயர் விஜயலட்சுமி, பேரூர் உதவி ஆனணயர் விமலா, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி ஆய்வர் சித்ரா மற்றும் துணை பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர்.