ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல்களில், 64 லட்சத்து, 89 ஆயிரத்து, 723 ரூபாய் காணிக்கை இருந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
தட்டு காணிக்கை உண்டியலில், 23 லட்சத்து, எட்டாயிரத்து ஒன்பது ரூபாய், நிரந்தர உண்டியலில், 41 லட்சத்து, 81 ஆயிரத்து, 714 ரூபாய், என, மொத்தம், 64 லட்சத்து, 89 ஆயிரத்து, 723 ரூபாய் காணிக்கை இருந்தது.
மேலும், தங்கம், 141 கிராம்; வெள்ளி, 415 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வர் சித்ரா மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.