மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

0
85

ஆனைமலை

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம் தொடங்கியதையொட்டி இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்து சென்றனர். மேலும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது.