மழை பெய்தால் தத்தளிக்கும் கோவை

0
70

மழை பெய்தால் தத்தளிக்கும் கோவை

மழை பெய்தால் கோவை தத்தளிக்கிறது. அதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போக்குவரத்துக்கு தடை

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் போது லங்காகார்னர் பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து தடைபடுகிறது. இது போல் அவினாசிரோடு மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் மழைநீர் புகுந்து குளம் போல் பெருகி விடுகிறது.

இதனால் மழை பெய்யும் போது அந்த சுரங்கபாதையில் வாக னங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் குட்ஷெட் ரோடு பகுதியில் திருப்பி விடப்படுகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிலை உள்ளது. இது போல் போதிய வடிவால் வசதி இல்லாததால் கோவை நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது. அப்போது சாலைகளே தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவல நிலை உள்ளது.

இதனால் மழை பெய்து விட்டாலே கோவை நகரம் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண கோவை மாநக ராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

கோவையில் மழை பெய்தால் கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னரில் தான் முதலில் போக்குவரத்து தடைபடு கிறது. அங்கு வடிகால் வசதி இல்லாதால் வெள்ளக்காடாக மாறி விடுகிறது. அங்கு தேங்கும் மழைநீரை லாரி மூலம் உறிஞ்சி அப்பு றப்படுத்துகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இது போல் அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் தேங்கும் தண்ணீரை அகற்ற நவீன மோட்டரை பயன்படுத்த வேண்டும்.

ரூ.11 கோடி திட்டம்

கிக்கானி பள்ளி அருகே ரெயில்வே பாலம் பகுதியிலும் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அங்கு வடிகால் வசதி செய்ய வேண்டும். வாலாங்குளம் நிரம்பி திருச்சி ரோடு வழியாக மழைநீர் ஆறு போல் ஓடுகிறது. அது நஞ்சுண்டாபுரம் ரோடு வரை பெருக்கெ டுத்து ஓடி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே வாலாங்குளம் நிரம்பி வெளியேறும் தண்ணீரை குழாய் மூலம் சங்கனூர் ஓடைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக அரசின் ரூ.11 கோடி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.