வால்பாறை, ; வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்பருவ மழையினால், பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின.இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து, பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மழைப்பொழிவு குறைவால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 122.58 அடியாகவும், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 112 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 68.08 அடியாகவும் இருந்தது.