மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் தேர்வு

0
12

கோவை; கோவை மளிகை வியாபாரிகள் சங்கத்தின், 2024-27ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல், கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள, சங்க அலுவலகத்தில் நடந்தது

இதில் தலைவர் பிரபாகர் தலைமையில் போட்டியிட்ட, 21 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், பிரபாகர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயலாளராக மருதராஜன், பொருளாளராக அன்புராஜ், துணைத் தலைவர்களாக கணேசன், விக்னேஷ் புகழ்வேந்தன், துணைச் செயலாளராக அமரேஷ், உதவி செயலாளராக சபிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, அனைத்து வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.