மளிகை கடையில் பணம் திருட்டு

0
7

கோவை, ஜன. 12: கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் குனசேகரன். இவரது மனைவி சித்ரா (30). இவர் கே.கே. காலனியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சித்ரா வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை அவர் வழக்கம் போல கடைக்கு வந்து கடையை திறந்து வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார்.

அப்போது, கல்லா பெட்டியை பார்த்த போது, அதில் இருந்த ரூ.20 ஆயிரம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணம் எப்படி திருட்டு போனது என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை. இதனால், அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.