மல்யுத்தப் போட்டியில் கோவை தீயணைப்பு வீரரின் மகன், மகள் அசத்தல்

0
6

கோவை, பிப். 28: தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த கூட்டமைப்பு சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான மல்யுத்த போட்டி சேலம் மேட்டூரில் நடைபெற்றது. பிரி ஸ்டைல் மற்றும் கிரீக்ரோனன் ஆகிய முறைகளில் நடைபெற்ற இந்த மல்யுத்த போட்டியில்,  சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 220 மாணவர்களும் 80க்கும் மேற்பட்ட மாணவிகளும் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்டம் சார்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வரும் காசி மாயனின் மகள் ஹர்ஷினி வர்ஷா மற்றும் மகன் சஸ்வத் வர்ஷா ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாணவி ஹர்ஷினி வர்ஷா 17 வயது மற்றும் 20 வயது உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். மாணவன் சஸ்வத் வர்ஷா 17 வயது உட்பட்டோருக்கான பிரிவில் வெண்கலம் வென்றார்.