மலைவாழ் மாணவர்கள் 3 பேர் மாயம்

0
53

வால்பாறை அருகில் உள்ள கீழ் பூணாச்சி மலைவாழ் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரின் மகன்கள் பிரவின்குமார் (13), அஜித்குமார் (13) மற்றும் இதே கிராமத்தை சேர்ந்த சாமுவேல் (15). அட்டகட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்தநிலையில் மாணவர்கள் 3 பேரும் கடந்த 24-ந் தேதியில் இருந்து காணவில்லை. இதனைத் தொடர்ந்து கீழ் பூணாச்சி மலைவாழ் கிராம மக்கள் இந்த சிறுவர்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் இவர்களை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில் காடம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து காடம்பாறை மற்றும் வால்பாறை போலீசார் தனிப்படை அமைத்து இந்த 3 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.