கோவையில் தங்கைக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சத்துணவு அமைப்பாளர் வேலை
கோவை தெலுங்குபாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்த வர் சண்முக சுந்தரம் (வயது 38). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் செல்வபுரம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் எனது சகோதரிக்கு அரசு வேலை தேடிக்கொண்டு இருந் தேன். அப்போது எனக்கு சரவணம்பட்டி சிவானந்தாபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் (35) என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு அரசு உயர் அதிகாரிகளை நன்றாக தெரியும் என்றும், அவர்கள் மூலம் எனது சகோதரிக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்.
ரூ.3½ லட்சம் மோசடி
இதை உண்மை என நம்பி நான் அவரின் வங்கிக்கணக்கில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினேன். சில நாட்கள் கழித்து பிரவீன்குமார் எனது சகோதரி சத்துணவு அமைப்பாளர் வேலையில் சேர்வதற்கான பணி ஆணையை கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு நான் எனது சகோதரியை வேலைக்கு அழைத்து சென்ற போது அது போலியான ஆணை என்பது தெரிய வந்தது.
எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு போலி ஆணையை கொடுத்து மோசடி செய்த பிரவீன்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அதன் பேரில் செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.