மருந்தியல் வார விழா கொண்டாட்டம்

0
11

கோவை: ஸ்ரீ அபிராமி மருந்தியல் கல்லுாரியில், 63வது தேசிய மருந்தியல் வாரவிழா சிறப்பாக நடந்தது. கல்லுாரி தலைவர் டாக்டர் பெரியசாமி விழாவை துவக்கி வைத்தா

விழாவின் ஒரு பகுதியாக, இலவச ஆரோக்கிய பரிசோதனை முகாம் குறிச்சியில் நடந்தது. 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கலந்துகொண்டு பயனடைந்தனர்.

சமூக நலனுக்கும், மருத்துவத்துறையில் மருந்தியல் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழா நிகழ்வுகள் நடந்தன. விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடந்தன.

நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், பாலமுருகன், கல்லுாரி டீன், முதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.