மருதமலையில் காட்டு யானைகள் உலா

0
81

கோவை மருதமலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. ஆகவே பக்தர்கள் கவனமுடன்கோவிலுக்கு செல்லுமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

காட்டுயானைகள் உலா

கோவை மேற்கு மலைத்தொடர்ச்சியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மருதமலைவனப் பகுதியில் காட்டு யானைகள், புள்ளி மான்கள், காட்டு பன்றிகள், சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கடந்த சில தினங்களாக மருதமலையில் இடும்பன் கோவில் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அதிகாலை நேரத்தில் உலா வருகின்றன. குறிப்பாக அந்த யானைகள் அங்குள்ள சிறுவாணி தண்ணீர் பைப்பை உடைத்து தண்ணீர் குடித்து விட்டு சென்றன. இதேபோல் மாலை நேரத்தில் மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை குடியிருப்பின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் மருதமலை மலைப்பாதையை கடந்து அட்டுக்கல் வனப்பகுதியை நோக்கி சென்று வருகின்றன.

கவனமுடன்…

காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டு யானைகள் இப்பகுதியை கடந்து செல்வது கடந்த சில தினங்களாக வாடிக்கையாக உள்ளது. எனவே மருதமலை மலைக்கோவிலுக்கு மலைப்பாதை படிக்கட்டுகள் வழியாகவும், வாகனங்கள் செல்லும் வழியாகவும் வரக்கூடிய பக்தர்கள் அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் வேண்டுமானால் அதிகாலை 7 மணிக்கு மேல், மாலை 6 மணிக்குள்ளாகவும், பக்தர்கள் இப்பாதையை கடந்துசெல்லலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.