மனைவி, குழந்தையுடன் வந்துதீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

0
48

கோவை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு டீசல் கேனுடன் ஒருவர், தனது மனைவி, குழந்தையுடன் வந்தார். அவர் திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கிருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து டீசல் கேனை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர் குனியமுத்தூரை சேர்ந்த நவீன் என்பதும், அவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணிபுரிவதும் தெரிய வந்தது. அவர், ஒப்பந்த ஊழிய ராக பணிபுரிந்து வந்த நிலையில் நிலுவை தொகையை கொடுக்க வில்லை.

எனவே அதை வழங்க கோரி மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து தீக்குளிக்க முயன்றதாக கூறினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.