மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

0
70

தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜூலியா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ராமபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்காபுரம் பகுதியில் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் கொள்கைகளான அகிம்சை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், எளிமை ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத நல்லிணக்க உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு ஆகியன குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சத்யா வரதராஜன் செய்திருந்தார்.