டெல்லியில் மரணம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை கமாண்டன்ட் உடல் கோவையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க நேற்று தகனம் செய்யப்பட்டது.
மத்திய ரிசர்வ் படை
கோவை குரும்பபாளையம் சுமங்கலி கார்டன் பகுதியை சேர்ந்த வர் நிர்மல் (வயது40). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி கமிஷனராக பணியில் சேர்ந்தார்.
அவர், கடந்த 2018-ம் ஆண்டு வெள்ளலூர் அருகே மகாலிங்கபு ரத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் ஒரு பிரிவான அதி விரைவு படை (ஆர்.ஏ.எப்.) 105-வது பட்டாலியன் துணை கமாண்டன்ட்டாக பணியாற்றினார்.
துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை
அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியின் காரணமாக டெல்லி சென்றார். அங்கு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் நிர்மல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் குடும்பபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை அவரது வீட்டில் மத்திய ரிசர்வ் படை போலீசார் நிர்மல் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
உடல் தகனம்
பின்னர் நிர்மலின் உடல் சரவணம்பட்டியில் உள்ள மின்மயானத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறந்த நிர்மலுக்கு பிரீத்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.