தனித்தனி ரசீது
பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச். (முன்னுரிமை குடும்ப அட்டை), ஏ.ஏ.ஒய். (அந்தியோ தயா அன்ன யோஜனா) கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக் கீட்டிலும், 2-வது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித் தனியாக பி.ஓ.எஸ். (பாய்ண்ட் ஆப் சேல்) எந்திரம் பதிவு செய்யு மாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுறுத்தி இருந்தார். இது, கோவை மாவட்டத் தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று நடைமுறைக்கு வந்தது. இது குறித்து கோவை மாவட்ட உணவு வழங்கல்துறை அதிகாரி சிவக்குமாரி கூறியதாவது:-
1400 கடைகளில் நடைமுறை
கோவை மாவட்டத்தில் 1400 ரேஷன் கடைகளிலும் பி.ஓ.எஸ். கருவி உள்ளது. இதன் மூலம் முதலில் மத்திய அரசு திட்டத்தில் அரிசி பெறும் கார்டுகளுக்கும், அடுத்து மாநில அரசு திட்டத்தில் அரிசி பெறும் கார்டுகளுக்கும் தனித்தனி ரசீது பதிவு செய்யப்படு கிறது.
உதாரணமாக பி.எச்.எச். கார்டுகளில், அரிசி ஒதுக்கீடு 12 கிலோ வாக இருக்கும்பட்சத்தில் புதிய முறைப்படி 5 கிலோ அரிசி மத் திய அரசு ஒதுக்கீட்டிலும், 7 கிலோ அரிசி மற்றும் இதர பொருட் கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகிறது.
அரிசி ஒதுக்கீடு 14 கிலோவாக இருக்கும்பட்சத்தில் 10 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 4 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும், 16 கிலோவாக இருக்கும்போது 10 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 6 கிலோ மாநில அரசு ஒதுக் கீட்டிலும் வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு
அரிசி ஒதுக்கீடு 18 கிலோவாக இருக்கும்போது, 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 3 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும், 20 கிலோவாக இருக்கும்போது 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 5 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கவேண்டும்.
அரிசி ஒதுக்கீடு 20 கிலோ (அலகு-4), 25 கிலோ, 30 கிலோ, 35 கிலோவாக இருக்கும்பட்சத்தில் அரிசி மொத்த அளவையும் மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இதர பொருட்களை மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகிறது.
செல்போனுக்கு குறுஞ்செய்தி
கார்டுதாரர்கள் கோதுமை பெற விரும்பினால் புதிய முறையில் மத்திய அரசின் தொகுப்பில் முதல் ரசீது அளவுக்கு உட்பட்ட இருப்புக்கு ஏற்றவாறு கோதுமை மற்றும் அரிசி பகிர்ந்து வழங்கப் படுகிறது. கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் திட்டத்தில் அரிசி பெறும் 4 லட்சம் முன்னுரிமை கார்டுகளுக்கு இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
மாநில திட்டத்தில் அரிசி பெறும் 6 லட்சம் கார்டுதாரர்களுக்கு ஒரு ரசீது மூலமே பொருட்கள் வழங்கப்படும். மத்திய, மாநில அரசின் ஒதுக்கீட்டில் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்பது கார்டுதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக சென்று விடும். இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.