புதுடெல்லி,
முன்னாள் பத்திரிகையாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி ஒரு பத்திரிகையாளராக இருந்தபோது, தான் சந்தித்த பாலியல் இன்னல்களை வெளியிட்டு உள்ளார்.
தனது டுவிட்டரில், நான் எம்.ஜே அக்பர் கதையுடன் இந்த தொடரை ஆரம்பித்தேன். அவர் “எதையும்” செய்யவில்லை என்பதால் அவருக்கு பெயரிடவில்லை. பெண்களுக்கு நிறைய பேர், இந்த வேட்டையாடி பற்றி மோசமான கதைகள்- ஒருவேளை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என அவர் டுவிட்டரில் கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது டுவிட்டர் பதிவில் சில பெண் பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கும் இதேபோன்று மோசம் நிறைந்த அனுபவங்கள் ஏற்பட்டன என்றும் அதனால், கிடைக்க இருந்த வேலையை கூட ஏற்க மறுத்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய மந்திரி அக்பர் விவகாரம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுபற்றி மந்திரி பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது ஒரு தீவிர விசயம். அமைதியாக இருப்பது தப்பி செல்லும் வழி அல்ல. இந்த விவகாரம் விசாரணை செய்யப்பட வேண்டும். இதில் அந்த மந்திரியும் மற்றும் பிரதமரும் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பு நிர்வாகி மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.
இதுபற்றிய கேள்விக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பதிலளிக்க மறுத்து விட்டார்.