மத்திய சிறையில் போக்சோ கைதி சாவு

0
85

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி காமராஜ் நகரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 72). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஈரோடு போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா கோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ரங்கசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கடந்த 16-ந் தேதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.