மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

0
12

கோவை: லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் செயல்பாட்டை முடக்க, பொய் வழக்கு போட்டதாக பா.ஜ., அரசை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி, ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாநில பொதுச் செயலாளர் சிவகுமார், மாநகராட்சி கவுன்சிலர் சரளா வசந்த், வீனஸ் மணி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.