மது விற்ற எட்டு பேர் கைது: 600 பாட்டில்கள் பறிமுதல்

0
49

கோவை; தைப்பூசம் விடுமுறையில் சட்ட விரோதமாக, மது விற்பனை செய்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 614 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தைப்பூசம் விடுமுறை தினத்தில், கோவை மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் செல்வபுரம் பகுதிகளில், சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த சிவகங்கையை சேர்ந்த ராம்கி, 27 மற்றும் கருப்பையா, 47 தெலுங்குபாளையத்தை சேர்ந்த திருமலை குமார், 46, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 106 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வைசியாள் வீதியில் மது விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு, 44, புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம், 36; வெரைட்டி ஹால் ரோட்டில் மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த விஜய், 31, கருணாநதி, 52, உக்கடம், லங்கா கார்னர் பகுதியில் மது விற்ற திருவாரூரை சேர்ந்த வேலாயுதம், 26 ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம், 508 பாட்டில்கள் மற்றும் ரூ. 7,150 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.