மண்புழு உர தொட்டி பெற அழைப்பு

0
12

அன்னுார்; மானியத்தில் மண்புழு உரத் தொட்டி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

அன்னுார் வட்டார வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:.

இயற்கை வேளாண்மையால், ரசாயன உர பயன்பாடு குறைகிறது. விளைபொருளில் ரசாயன கலப்பு குறையும். மத்திய, மாநில அரசுகள் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கின்றன. இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு சந்தையில் கூடுதல் விலை கிடைக்கிறது. இயற்கை வேளாண்மைக்கு மண்புழு உரம் முக்கியமான ஒன்று. மண்புழு உரம் உற்பத்தி செய்ய தேவையான தொட்டி மானிய விலையில் கணேசபுரத்தில் உள்ள வேளாண் கிடங்கில் உள்ளது.

விவசாயிகள் பங்குத்தொகை 950 ரூபாய் மட்டும் செலுத்தி மண்புழு உரத் தொட்டி பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97886 43941 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.