மண்டல வருமான வரித்துறை தலைமை கமிஷனர் நியமனம்

0
11

கோவை; கோவை மண்டல வருமான வரித்துறை தலைமை கமிஷனராக, அருண் பரத் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்

இவர், அண்ணா பல்கலையில் கம்ப்யூட்டர் பொறியியல் பட்டம் படித்திருக்கிறார். பி.எல்., எம்.பி.ஏ., பட்டங்களும் பெற்றிருக்கிறார். வருமான வரித்துறையில் இணைவதற்கு முன், சென்னை ஐ.ஐ.டி.,யில் பணிபுரிந்திருக்கிறார்.

1991ல் இந்திய வருவாய் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, வருமான வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்றார். தமிழகம் மட்டுமின்றி, மும்பை, புனேவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

வருமான வரித்துறையில், சிறந்த சேவைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட இவர், ‘சிறிய மாற்றம், பெரிய வெற்றி’ என்ற தலைப்பில், சுயமுன்னேற்ற நுால் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.