மக்களுக்கு தினமும் தொல்லை சாலையும் சரியில்லை… தெருவிளக்கு வசதியுமில்லை!

0
11

கவனச் சிதறல்

துடியலுார் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில், ஏராளமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்.

— நவீன், துடியலுார்.

சாலையில் கழிவுநீர்

கோவை, வார்டு எண் 59ல், வசந்தா மில் ரோட்டில் சாக்கடை கால்வாய் கட்டி, நாற்பது வருடங்களுக்கு மேலாகிறது. 90 சதவீதம் கால்வாய் இடிந்து மண் நிரம்பியுள்ளதால், சாக்கடை நீர் சாலையில் செல்கிறது. இதனால், நடந்து செல்லவும், வாகனப் போக்குவரத்துக்கும், சிரமம் ஏற்படுகிறது.

– -கார்த்திகேயன், சிங்காநல்லுார்.

சிதைந்த சாலை

மலுமிச்சம்பட்டி ஊராட்சி கற்பகவளர் நகர் முதல், பாலம் வரை பல வருடங்களாக தார் சாலை சிதைந்து கிடக்கிறது. தெருவிளக்கும் இல்லை. ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ள நிலையில், இதுபோன்ற நிலையால் மக்கள் தினம், தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

– -தண்டபாணி, கற்பகவளர்நகர்.

சுகாதார சீர்கேடு

வார்டு எண் 50ல், உடையாம்பாளையம் சாலை, ராஜேஸ்வரி நகரில், அங்குள்ள கோவிலுக்கு பின்புறம், ஒரு கடையின் உரிமையாளர் குப்பையை நிறைத்து விடுகிறார். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

— தேவதாஸ், உடையாம்பாளையம்.

கொசுத்தொல்லை

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதுார் வார்டு எண் 7ல் உள்ள, லட்சுமி நகர் ஜீவா தெருவில், கால்நடைகளின் சாணம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

— கலை, சின்னியம்பாளையம்.