‘மகளிர் மட்டும்’ நிகழ்ச்சி … மட்டற்ற மகிழ்ச்சி! கோவையில் வரும் 16ல் நடத்துகிறது

0
4

கோவை : வரும், 16ம் தேதி ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் லட்சுமி செராமிக்ஸ் சார்பில் மகளிர் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண்களை கடவுளாகவும், நதிகளாகவும், இயற்கையாகவும் பார்த்து பழகிய தேசம் நம்முடையது. இங்கு அனைத்திலும் சரிபாதிஅவர்களுக்கு எப்போதும் உண்டு.

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவுக்கு ஆணுக்கு நிகர் பெண் என, முரசு கொட்டி வருகின்றனர். பாரதியின் எண்ணங்களை இன்றைய யுவதிகள் மெய்ப்பித்து வருகின்றனர். இல்லங்களின் பொருளாதாரத்தில் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் இன்று பெண்களின் பங்கு பெருமளவில் உள்ளது.

பெண்கள் இல்லா உலகை கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் அவர்களை கவுரவிக்கும் வகையில், மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான மகளிர் தின நன்னாளை ‘தினமலர்’ நாளிதழ், உன்னத விழாவாக, கோவையில் கொண்டாடுகிறது.

‘தினமலர்’ நாளிதழ் மற்றும் லட்சுமி செராமிக்ஸ் இணைந்து வரும், 16ம் தேதி கோவை நவஇந்தியா, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், ‘மகளிர் மட்டும்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பவர்டு பை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், கோ-ஸ்பான்சராக திருப்பூர் வால்ரஸ் நிறுவனம், பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் உள்ளனர். அறிவுசார் பங்குதாரராக பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் உள்ளது.

பரிசுகளை பொன்மணி வெட்கிரைண்டர்ஸ், மெடிமிக்ஸ், ஐயப்பா நெய், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள், யுனிக் கிப்ட்ஸ் வழங்குகின்றனர். ஹாஸ்பிட்டாலிட்டி பார்ட்னராக ஓ பை தாம்ரா, கோவை இடம் பெறுகின்றனர்.

பெண்களுக்கான நிகழ்ச்சி என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அவர்களை மேலும் மகிழ்விக்க சிறப்பு நடன, இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கான போட்டிகள் தான் இங்கு ‘ஹைலைட்’.

வெற்றி பெறுவோருக்கு, கிரைண்டர், இன்டக்சன் ஸ்டவ், கெட்டில்கள், புடவைகள் பரிசுகள் வழங்கப்படும். சமூகத்தின் உயர்வுக்கு பல்வேறு துறைகளில் தங்களை அர்ப்பணித்த பெண் ஆளுமைகளுக்கு ‘மலர் மங்கை’ விருதுகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில், பெண்கள் வயது வரம்பின்றி பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.