போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மனு

0
9

கோவை, ஜன. 18: கோவை மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாளை கோவையில் வக்பு உரிமை மீட்பு மாநாடு நடக்க உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், இந்த மாநாடு பிலால் ஹாஜியார் திடல், லாரிப்பேட்டை, உக்கடம் என்ற இடத்தில் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிலால் ஹாஜியார் என்பவர் கடந்த 1991ம் ஆண்டு இந்து இயக்க தலைவர் வீரசிவா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் ஆவார். தண்டனை பெற்றவரின் பெயரை திடலுக்கு சூட்டுவதால் மத மோதல் ஏற்பட வழிவகுக்கும். எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.