போலீசார் தீவிர கண்காணிப்பு

0
149

குக்கர் குண்டுவெடிப்பு

கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார். இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை உருவானது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

இந்தநிலையில் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் கண்காணிப்பு தீவிரம்

குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆசாமி, கோவையில் தங்கி இருந்ததும், கோவை என போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நகரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார் கள். மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் 1000 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோதனைச்சாவடிகள்

ஆனைக்கட்டி, மாங்கரை, அட்டப்பாடி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய் யப்படுகிறது. கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள், ரெயில்களிலும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும் மக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், ரெயில்நிலையம், விமானநிலையம், வழிபாட்டு தலங்கள், முக்கிய கோவில்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமை யில் போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர்.