மதுக்கரை, மார்ச் 29: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொறியாளர் அஸ்லாம் பாஷா சார்பில் 500 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ரம்ஜான் பிரியாணி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜின்னா தலைமையில் வார்டு செயலாளர் முரளிதரன் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் 500 இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் பிரியாணி தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள், காதர், குறிச்சி இரா.கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பிலிப், மாணவரணி அமைப்பாளர் பிரபு. சாஜகான், சம்சுதீன், தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.