பொள்ளாச்சி அருகே, 16.50 கிலோ போதை வஸ்துகளை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துகள், மறைமுகமாக விற்பனை தொடர்கிறது.
துறை ரீதியான அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டாலும், அதன் மீதான விற்பனையை, முழுமையாக தடை செய்ய முடிவதில்லை. அதேபோல், பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகிலும், தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்கள், பீடி, சிகரெட் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உணவு பாதுாப்பு அலுவலர்கள் மற்றும் கோமங்கலம் போலீசார், தேவநல்லுார் கிராமத்தில் உள்ள கடைகள்தோறும், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பட்டுராஜா என்பவரது கடையில், விற்பனைக்காக, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 16.50 கிலோ போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.