‘போக்சோ’ வழக்கில் கைது மீண்டும் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர்

0
11

கோவை: போக்சோ வழக்கில் சிறை சென்ற குற்றவாளி வெளிவந்த சில நாட்களில், மீண்டும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கணவரை இழந்து தனது 16 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அப்பெண்ணின் 35 வயது அக்கா கணவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடிதனிமையில் இருந்து வந்தனர்.

இதையடுத்து அந்த நபர் அப்பெண்ணின், 16 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், அந்த நபர் ஜாமீனில் வெளிவந்தார். வெளிவந்த அவர், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அதே சிறுமியை, அழைத்துக்கொண்டு திருச்செந்துார் சென்றுள்ளார். அங்கு சிறுமியைமீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை மீண்டும் போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.