பொள்ளாச்சி பலாத்கார வழக்கு; 9 பேரை ஆஜர்படுத்த உத்தரவு

0
5

கோவை: பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஒன்பது பேரை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், 2019ல், கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு,29, சபரிராஜன்,29, சதீஷ்,32, வசந்தகுமார்,30, மணிவண்ணன்,32, ஹெரன்பால்,34, பாபு,30, அருளானந்தம்,37, மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து, கோவை மகளிர் கோர்ட்டில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சி விசாரணை அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், அரசு தரப்பு குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்க ஏப்.,5ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் ஒன்பது பேரையும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.