நடப்பாண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதியிலும், பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு அக்., மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்டவைகளில் திருத்தங்கள் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பணிகள் நிறைவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி சப் – கலெக்டர் கேத்ரின் சரண்யா, பட்டியலை வெளியிட்டார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி தொகுதியில், ஆண், 1,08,969, பெண், 1,20,073, மற்றவர்கள், 44 என மொத்தம், 2,29,086 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் – 2,279, பெண் – 2,901, மற்றவர்கள் – 5 என மொத்தம், 5,185 பேர் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்கள் – 1,433, வெளியூர் சென்றோர் – 3,026, இருமுறை பதிவு – 126 என மொத்தம், 4,585 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.
* வால்பாறை தொகுதியில், ஆண் – 94,250, பெண் – 1,04,505, மற்றவர்கள் – 26 என மொத்தம், 1,98,781 பேர் உள்ளனர்.ஆண் – 2,009, பெண் – 2,389 மற்றவர் – 1 என மொத்தம், 4,399 பேர் சேர்க்கப்பட்டனர். இறப்பு – 2,216, வெளியூர் – 2,306, இருமுறை பதிவு – 269 என மொத்தம், 4,791 பேர் நீக்கப்பட்டனர்.
* கிணத்துக்கடவு தொகுதியில், ஆண் – 1,70,808, பெண் – 1,78,963, மற்றவர்கள் – 44 என மொத்தம், 3,49,815 வாக்காளர்கள் உள்ளனர்.10,097 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்; 3,633 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தொகுதியிலும், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகளவு உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல், சப் – கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
* உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோட்டாட்சியர் குமார், தாசில்தார்கள் விவேகானந்தன், பானுமதி, தேர்தல் பிரிவு தாசில்தார்கள் சையது ராபியாம்மாள், வளர்மதி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உடுமலை தொகுதியில், 2,763 ஆண்கள், 3,392 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 6,156 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல், 946 ஆண்கள், 1,003 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 1,950 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில், 1,28,771 ஆண்கள்; 1,40,116 பெண்கள்; 31 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2,68,918 வாக்காளர்கள் உள்ளனர்.
* மடத்துக்குளம் தொகுதியில், 2,089 ஆண்கள், 2,541 பெண்கள் என, 4,630 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 459 ஆண்கள், 536 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 996 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில், 1,16,739 ஆண்கள்; 1,23,338 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2,40,095 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இரு தொகுதிகளிலும், புதிதாக, 10,786 பேர் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். 1,946 பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே போல், உடுமலை தொகுதியில், ஆண்களை விட, பெண்கள், 11,345 பேர் கூடுதலாக உள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதியிலும், ஆண் வாக்காளர்களை விட, 6,599 பெண் வாக்காளர்கள்
கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைவதிலும், ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஆர்வம் காட்டியுள்ளனர்.