பொருளாதார பாதிப்புகள் விரைவில் சீராகும் பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி

0
108

பா.ஜனதா கட்சியின்மாநிலபொதுச்செயலாளர்வானதிசீனிவாசன், கோவைவி.கே.கே.மேனன் சாலையில்உள்ள கட்சிஅலுவலகத்தில்நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின்ஒவ்வொரு கிளைகளிலும் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.அமைப்பு தேர்தல்பணிகளில் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் 370-வதுசட்டப்பிரிவு நீக்கப்பட்டதில் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காகமாவட்டந்தோறும்முக்கியநிர்வாகிகளை கொண்டு பொதுக்கூட்டம்நடத்தப்படும். வருகிற 17-ந்தேதி பிரதமர்மோடி பிறந்த நாளையொட்டி சேவை வாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ முகாம்கள், பிளாஸ்டிக் எதிர்ப்பு நிகழ்வுகள், மாற்றுத்திறனாளிகளுக்கானமேம்பாட்டு பணிகள், மரம் நடுவது என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

நவம்பர் முதல் வாரத்தில்மாநில தலைவருக்கானதேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையிலும்மாநில தலைவர்அறிவிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.மாநில தலைவர்இல்லை என்றாலும்கட்சி பணிகளில்எந்த சுணக்கமும்இல்லை.மாநில தலைவராகதேர்வுசெய்ய வாய்ப்பு இருக்கும் பட்டியலில் 15 பேர் வரை இருக்கின்றனர்.பொருளாதார பாதிப்புகுறித்தபீதி கிளப்பி விடப்படுகின்றன. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால்இந்தியாவிற்கு பாதிப்புவரலாம் என்ற நிலைமை இருக்கிறது. விரைவில்நிலைமை சீராகவாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கை இழக்காமல் தொழில் அமைப்புகள் வங்கிகளுடன் பேச வேண்டும். இந்த மாத இறுதிக்குள் பொருளாதார நிலையில்உள்ள பாதிப்புகள்சரியாகும்.

சர்க்கரை ஆலைகள் நெருக்கடியில் இருக்கின்றன. அதைசரி செய்யமத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தொழில்களுக்கு பாதிப்புஇல்லை என்று சொல்லவில்லை. முற்றிலும்முடங்கி போய்விடவில்லை. தற்போது ஏற்பட்டுள்ளசிறு பாதிப்புகளைசரி செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஜாப்ஆர்டருக்கானஜி.எஸ்.டி.யை5சதவீதமாக குறைக்கவேண்டும் என்ற சிறு,குறுதொழில் அமைப்பினரின்கோரிக் கை தொடர்பாகவிரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.