பொங்கல் விழா; ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

0
8

மேட்டுப்பாளையம்; பொங்கல் விழாவை முன்னிட்டு, ரயில்வே நிர்வாகம் ஊட்டிக்கு, இரண்டு நாட்கள் சிறப்பு ரயிலை இயக்குகிறது.

தமிழகத்தில் தை பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசு, 14ம் தேதியிலிருந்து, 19ம் தேதி வரை, 6 நாட்களுக்கு விடுமுறை விட்டது. வெளியூர்களில் வேலை செய்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று, பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயிலை இயக்க அறிவித்தது.

இதில் 16, 18ம் ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், 17, 19ம் ஆகிய தேதிகளில், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் சிறப்பு ரயிலை இயக்க, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதை அடுத்து நேற்று காலை, 9:15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து, 164 பயணிகளுடன், ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,’சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வருகிற, 18ம் தேதி மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது,’ என்றார்.