பொங்கல் விடுமுறை முடிந்து வந்து சேர்ந்த கோவை மக்கள்

0
7

கோவை : பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், கோவை திரும்புவதால் ரயில்வே ஸ்டேஷன், பஸ்களில் நேற்று கூட்டம் அதிகம் இருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11ம் தேதி முதல் இன்று வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

விடுமுறை முடிந்து, நாளை இயல்பு வாழ்க்கை மீண்டும் துவங்கவுள்ளதால், அனைவரும் நேற்று முதலே ரயில்கள், பஸ்களில் ஊர் திரும்பி வருகின்றனர். கோவை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.