பொங்கலுக்கு விட்டாங்க லீவு கடைகளில் நடந்தது திருட்டு

0
7

கோவை,; பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி, கோவையில் மூன்று கடைகளில் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பி.என்.புதுாரை சேர்ந்தவர் சங்கீதா, 36; கவுண்டம்பாளையம் பூம்புகார் நகரில் உள்ள பியூட்டி பார்லரில், பணிபுரிந்து வருகிறார். 14ம் தேதி சங்கீதா பார்லரை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். பொங்கல் விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் சங்கீதா பார்லரை திறக்க வந்தார். பார்லர் ஜன்னல் மற்றும் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் ரூ.5 ஆயிரம், செல்போன், ‘ஹேர் டிரையர்’ திருட்டு போயிருந்தது. சங்கீதா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

* சின்னியம்பாளைத்தை சேர்ந்த கிருபாகரன், 32; அதே பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி வியாபாரத்தை முடித்து, கடையை பூட்டி சென்றார். இந்நிலையில், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கிருபாகரனுக்கு போன் வந்தது. அவர் சென்று பார்த்த போது, கடையில் இருந்து ரூ. 12 ஆயிரம் திருட்டு போயிருந்தது. கிருபாகரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும், போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.