பொங்கலுக்காக 1.78 லட்சம் பயணிகள் சொந்த ஊர் பயணம்

0
7

கோவை; பொங்கலையொட்டி கோவை மண்டலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, 1.78 லட்சம் பயணிகள் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்துள்ளனர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக பல்வேறு பகுதிகளுக்கும், 1,520 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை மண்டலத்தில் இருந்து, 850 பஸ்கள் இயக்கப்பட்டன. இச்சிறப்பு பஸ்கள் வாயிலாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். கடந்த, 12ம் தேதி முதல், 15 ம் தேதி வரையில், பயணிகளின் வசதிக்காக கோவை மண்டலத்தில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, மதுரை, தேனி, மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும், சூலுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கரூர், திருச்சி வழியாக செல்லும் பஸ்களும், காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், வழியாக செல்லும் பஸ்களும், மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து குன்னுார், ஊட்டி, கூடலுார், கோத்தகிரி செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், இச்சிறப்பு பஸ்கள் வாயிலாக, 1.78 லட்சம் பயணிகள் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.